#GreenHajj2019 ஒரு சவால்

Hajj
Sadham Bukhari

#GreenHajj2019 என்ற பொறுப்பான ஹஜ்ஜிற்கான சவாலை goimomi.com முன்மொழிகிறது. இதனால் எல்லா பயணிகளுக்கும் ஹஜ் பயணம் மிக சிறந்த, தூய்மையான, பாதுகாப்பான பயணமாக அமையும் இன்-ஷா-அல்லாஹ்.

ஹஜ்ஜும், உம்ராவும் நமது ஈமானின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகவும்,  இஸ்லாத்தின் தூண்களான ஐந்து கடமைகளில் இருந்து வாழ்வில் ஒரு முறையாவது இந்த புனித பயணம் மேற்கொள்ளும்படி இஸ்லாம் கட்டளையிடுகிறது. மேலும் அன்றைய காலகட்டங்களில் இந்த புனித நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ள மக்கள் நடைப்பயணமாகவும், ஒட்டகம்,கப்பல் போன்ற வாகனங்களை பயன்படுத்தியும் சென்றார்கள். இன்றைக்கு வான்வழி பயணமாக விமானத்தில் பயணிக்கிறார்கள்.

காலங்கள் கடக்க இவ்வுலகம் மனித வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தியதைப்போல, புனித பயணம் மேற்கொள்ளும் விஷயத்திலும் பற்பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.

இந்த ஆன்மீக அனுபவத்தை அடைந்து, அதை வெல்வதற்காக லட்சக்கணக்கான பயணிகள் உலகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்காக மிகப்பெரிய அளவில் பயணம் மேற்கொண்டு ஓரிடத்தில் சங்கமிக்கிறார்கள்.

ஹஜ்ஜுடைய காலகட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடுகிறார்கள், இதனால் அதிகமான கழிவுகள் உருவாகி, சாலைகள் வாகன வெள்ளத்தால் மூழ்கிவிடுகிறது, கிட்டத்தட்ட அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பிவிடுகிறது. அதிகமான தண்ணீர், மிக அதிகமான மின்சாரம்,  டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆயிரக்கணக்கான மக்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடும்போது என்னவெல்லாம் நிகழும் என்று நாமே ஒரு கற்பனை செய்து கொள்ளலாம். இது போன்ற காரணங்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்துவதோடு, ஹஜ்ஜுடைய நோக்கத்தையே பாழ்படுத்திவிடுகிறது.

இதற்கு மக்களின் அறியாமையும், சக மனிதனையும், சுற்றுச்சூழலையும்  பாதுகாக்கும் பொறுப்பில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளும் இவற்றுள் சில காரணங்களாகும்.

புனித பயணம் மேற்கொள்ளும் மக்களில் பெரும்பாலோர்க்கு இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலையும் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வு இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாக இருக்கிறது. எல்லா விஷயத்திலும் பொறுப்பற்று, சுற்றுச்சூழலை சீரழித்து, சேதம் விளைவிப்பது அல்லாஹ் தஆலா வெறுக்ககூடிய  ஒன்றாக இருக்கிறது.

அருள்மறை அல்குர்ஆணை பொறுத்தவரை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது மார்க்க ரீதியான கடமை மட்டுமல்ல, மாறாக சமுதாயத்துக்கு ஆற்றவேண்டிய கட்டாய கடமையாக இருக்கிறது. இயற்கை வளங்களை சீரழிப்பது என்பது அவற்றை பராமரிக்கும் பொறுப்பிலிருந்து நீங்கியதை தொடர்புபடுத்துகிறது.

#GreenHajj2019 சவாலை எப்படி வெல்வது?

ஒரு புனித பயணி சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்புக்கான நல்ல பழக்கவழக்கங்களை நடைமுறைப்படுத்தி, பசுமைமிகு தூய்மையான முறையில் ஹஜ் கடமையை நிறைவேற்றும்போது அந்த ஹஜ் பல நன்மைகளை அடைவதற்க்கு காரணமாகிறது. அந்த வகையில் நாம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்ற பலவகையான வழிமுறைகளை நடைமுறைப்படுத்தும்போது நம்மால் இந்த சவாலை வெல்ல முடியும்.

பின்வரக்கூடிய நுட்பமான விஷயங்களை பின்பற்றுவதால் நம்முடைய இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கும், பசுமைமிகு ஹஜ்ஜை செய்யவும், ஹஜ்ஜின் முழுமையான பயனை அடையவும் உதவியாக இருக்கும்.

*) மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களை பயன்படுத்துதல் : மீண்டும் மீண்டும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தக்கூடிய பொருட்களான தண்ணீர் பாட்டில்கள், தட்டுகள், கரண்டிகள் ஆகியவற்றை நம்முடைய சொந்த நாட்டிலேயே வாங்கி வந்து பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும்.அதிகமாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளவேண்டும்.

*) விவேகத்தோடு மின்சாரத்தை பயன்படுத்துதல் : ஏ.சி மற்றும் மின்சாதன பொருட்களை அணைத்துவிட்டு அறையை விட்டு வெளியேற வேண்டும். ஏ.சி பயன்படுத்தும்போது அதனுடைய மின்சாரம் வீணாவதை குறைக்க Timer வைத்து கொள்ள வேண்டும். ஜன்னல் மறைப்புகளை பகல் நேரத்தில் திறந்து வைத்து Light போடுவதை தவிர்க்க வேண்டும். Heater பயன்படுத்தாத சமயத்தில் அதை அணைத்து வைக்க வேண்டும். இவை போன்ற சில வழிமுறைகளால் மின்சாரம் வீணடைவதை குறைக்க முடியும்.

*) தண்ணீரை பயன்படுத்தும் சிறந்த வழிமுறை : ஒளு செய்ய, குளிக்க , இன்ன பிற தேவைகளுக்கு தண்ணீரை குறைவான அளவில் பயன்படுத்த வேண்டும். குழாயின் நல்லியை தேவைக்கு ஏற்றார்போல் திறக்க வேண்டும். துணிகளை துவைக்க அளவான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். தேவையில்லாமல் போர்வை, கம்பளி போன்றவற்றை அடிக்கடி சலவையில் போட்டு தண்ணீர் வீணடிப்பதை தவிர்க்க வேண்டும். குழாய்களில் எங்காவது பழுது ஏற்பட்டு நீர் வெளியேறிக்கொண்டிருந்தால் தகுந்த நபரிடம் புகார் தெரிவித்து அதை சரி செய்ய வேண்டும்.

*) சுற்றியுள்ள இடத்தை தூய்மையாக வைத்திருத்தல் : கழிவுகளை பொது இடங்களில் போடுவதை தவிர்க்க வேண்டும். குப்பை கழிவுகளை தெருக்களில் வீசி எரியாமல் அவற்றை பிரித்து அவற்றுக்குரிய குப்பை தொட்டியில் போட வேண்டும்.

*) உணவை வீணடிப்பதை தவிர்த்தல் : உணவை அதற்குரிய நேரத்தில் உண்ண வேண்டும். மீதம் வைத்து வீண் விரயம் செய்யாமல் தேவையான உணவை எடுத்து கொள்ள வேண்டும்.

*) பேருந்து போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்துதல் : எரிபொருள் சிக்கனத்தை மேற்கொள்ளவும், காற்று மாசடைவதையும் தடுக்க ஹரம்/மீகாத் மற்றும் கடைகளுக்கு செல்ல விரும்பும் ஒரு தனி நபர் கார் மற்றும் டாக்ஸி போன்றவற்றில் செல்வதை விட குழுவில் உள்ள சக பயணிகளுடன் சேர்ந்து செல்ல வேண்டும்.

*) நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பயணம் மேற்கொள்வது : ஏதாவது நோய்வாய்ப்பட்டால் தேவையான மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அது தொடரும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். பிறருக்கும் பரவி தாக்கக்கூடிய நோய் எதுவும் உங்களை பாதித்து இருந்தால் வெளியே பொது இடங்களில் சுற்றி திரிவதை தவிர்க்க வேண்டும். இதர கழிவுகளை அகற்றும் போது மருந்து மற்றும் மருத்துவ கழிவுகளையும் சேர்த்து வைக்க வேண்டாம். இதனால் சக பயணிகளுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

goimomi.com  முன்மொழியக்கூடிய #GreenHajj2019 சவாலுக்கு எவ்வாறு நம்முடைய பங்களிப்பை அளிப்பது?

ஹஜ்ஜை தூய்மை மிகுந்ததாகவும், பசுமையானதாகவும் அமைக்க சவுதி அரேபிய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

goimomi.com இந்த #GreenHajj2019 என்ற சவாலை எல்லா பயண ஏற்பாட்டாளர்களுக்கும் பரவச்செய்திட அரசு அதிகாரிகளை அழைக்கிறது. மேலும் ஒவ்வொரு ஹஜ் பயண குழு ஏற்பாட்டாளர்களும் இந்த சவாலை கையாண்டு மேலே குறிப்பிட்ட வழிமுறைகளை அவர்களுடைய குழு தலைவரையும், அனைத்து ஹஜ் பயணிகளும் பின்பற்ற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இறுதியாக நாம் இஸ்லாமிய வழிமுறைகளை பின்பற்றுவதற்காக இந்த சவாலை ஒவ்வொருவரும் ஏற்று அதை மனதில் வைத்துக்கொண்டு பின்பற்ற வேண்டும். சக முஸ்லிமுக்கும், இந்த சுற்றுச்சூழலுக்கும் ஆற்றவேண்டிய பங்களிப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும்.

இந்த வருடம் முதல் இந்த சவாலை மேற்கொண்டு, 100% இதற்கான பங்களிப்பை அளித்து வெற்றியடைய வல்ல இறைவன் உதவி புரிவானாக ! ஆமீன்.

Please follow and like us:
678

2 thoughts on “#GreenHajj2019 ஒரு சவால்

  1. AffiliateLabz

    Great content! Super high-quality! Keep it up! 🙂

    1. Mohamed

      THANK YOU Sir

Leave A Comment

Related Post